Graphic Novels

Buy Graphic Novel Series

We are sorry, but our Tamil edition of the graphic novel is out of stock

To Order A Graphic Novel Book Set:

NEW LOWER PRICE 

ONLY $40 US or $50 Canadian

900 Pages Full Color 2 Volume Set

For SET OF TWO BOOKS (in either language)

From a US location:           order

 From a Canadian location: order

Ordering from Europe or Asia?  Coming soon... a direct order shipment arrangement from our Indian office affiliate.  The postage will be cheaper for you and so will the base price!  However, if you can not wait and must order now then click the US button and order in US dollars.  We will have the product shipped to you from Canada. (the packaged set weighs 2.5 kg!)

 பொன்னிவள காவியம்

 

மானுடவியலாளர் டாக்டர் பிரெண்டா பெக் குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமான வாய்மொழி வரலாற்றை 50 வருடங்களாக ஆராய்ந்தவர். இப்பொழுது இந்த வரலாற்றை அவர் உலக வாசகர்களுக்கு உயிர் இயக்கமாகவும் (animation), அச்சு நூலாகவும் வண்ணப் படக்கதைப் புத்தகமாவும் வெளியிடுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டு பாணர்கள் பாடிய ’அண்ணன்மார் கதை’ பல நூற்றாண்டுகளாக ’பொன்னிவள காவியம்’ என அறியப்பட்டு வருகிறது. முதன்முறையாக இந்த பிரபலமான காவியம் தற்போது அச்சு, மற்றும் டிவிடி (DVD) வடிவத்தில் பொன்னிவள பதிப்பகத்தில் கிடைக்கிறது. பெரிய விவசாயக் குடும்பம் ஒன்று மூன்று தலைமுறைகளாக வாழ் நிலம் அமைப்பதற்கு பட்ட பாட்டையும், எதிர்கொண்ட பசி, துன்பம், போட்டிகள், மாயமந்திரங்கள் மற்றும் அரக்கர்களின் அக்கிரமங்கள் ஆகியவற்றையும்  கூறுவதுதான் இந்தக் காவியம்.

 

பாகம் ஒன்று : ராச்சியம் உருவானது

பெண் கடவுளான பார்வதி ஒன்பது சகோதரர்களை நிலத்தில் விவசாயம் செய்வதற்காக உருவாக்கினார். ஒரு கடுமையான வறட்சியின்போது ஒன்பது சகோதரர்களும் அவர்கள் மனைவியரும் சோழ மன்னரிடம் உதவி நாட அவரும் பொன்னிவள நாட்டை அவர்களுக்கு வழங்கினார். மூத்தவர் தவறுதலாக புனிதமான பசுமாட்டை கொன்றுவிட்டதால் கோபமடைந்த சிவன் அவருடைய நாடும் குடும்பமும் ஏழு தலைமுறைகளுக்கு விளங்காமல் போகும் என சபித்தார். இந்தக் கொடிய சாபத்திலும், சிறிது ஆறுதல்தரும் விதமாக அவர்களுக்கு மந்திரக் குழந்தை ஒன்று கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாலகன் ஐந்து வயதை எட்டியதும் பெற்றோர்கள் இறந்து விடுகிறார்கள். வசதியான விவாசாயக் குடும்பம் ஒன்று அனாதையான சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனை வேலைக்காரனாக ஏற்றுக்கொள்கிறது. சிறுவன் வளர்ந்து இளைஞனானபோது எசமானரின் தங்கைதான் அவனுக்கு உரித்தான மனைவி என்பதையும், பொன்னிவளநாட்டின் உண்மையான வாரிசு அவன்தான் என்பதையும் விஷ்ணு வெளிப்படுத்துகிறார். பொன்னிவளநாட்டு ராச்சியத்தை மீட்ட புதிய அரசனும் அவர் ராணியும் பத்து ஆண்டுகள் யாத்திரைம் செய்து சிவபெருமான் திருச்சபையை அடைந்து தங்கள் பரம்பரை சாபத்தை நீக்கும்படி பிரார்த்திக்கிறார்கள். அப்படியே விமோசனம் கிடைத்து திரும்பும் வழியில் பொன்னிவள நாட்டு ராச்சியத்தை அடியோடு அழிக்கப்போகும் பேராபத்து அவர்களை நோக்கி வருவது உணர்த்தப்படுகிறது.

 

 

பாகம் இரண்டு : ராச்சியத்தில் போட்டி

பொன்னிவள அரசனது வீரப் பத்தினி மூன்று குழந்தைகளுக்கு தாயானார். ஒரே சூலில் ராணிக்கு பொன்னர் – சங்கர் என இரட்டைப் பிள்ளைகளும், தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட தங்காள் என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் பங்காளிகளினால் ஏற்படவிருந்த கொலைச் சதியிலிருந்து ஒருவருமறியாமல் அவர்களை மறைத்துக் காப்பாற்ற விஷ்ணு தன் சகோதரிக் கடவுளும், அவர்கள் குடும்பத் தெய்வமுமான செல்லாத்தாவை தூண்டுகிறார். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் ராசாவும் ராணியும் இரண்டாவது தடவையாக நாடு கடத்தப்படுகிறார்கள். ஐந்து வருடம் கழித்து ராசாவுக்கும் ராணிக்கும் செல்லாத்தாக் கடவுள் மகன்கள் உயிரோடு இருக்கும் உண்மையை வெளிப்படுத்த, அரசகுடும்பத்தினர் தங்கள் பிரியமான நாட்டுக்கு திரும்புகிறார்கள். குமாரர்கள் வாலிப வயதை அடைந்ததும், அவர்கள் பெற்றோர்கள் சாக, பொன்னர் – சங்கர் பொன்னிவள நாட்டை ஆளுகிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு பழி வாங்கவும், தங்கள் பரம்பரை பெருமையை வீரச்செயல்களால் நிலைநாட்டவும், மூதாதையரை கௌரவிக்கவும், சோழ அரசனின் பிடியிலிருந்து தங்கள் நாட்டை விடுதலை செய்யவும் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் தங்கை யாசித்த அபூர்வ பரிசு ஒன்று ஆட்சியில் சிறு தடங்கலை ஏற்படுத்தி வேடுவர்களின் பகையை தூண்டுகிறது. இவர்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் என முன்னரே  கூறப்பட்ட ராட்சத வராகத்துடன் நேரில் மோதி அதைக் கொல்கிறார்கள். அந்த வெற்றி, சமரை இன்னும் விரிவாக்கியதில் வேடுவர்களுக்கும் இவர்களுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்து இறுதியில் பொன்னர், சங்கர், தங்காள் மற்றும் அவர்களின் விசுவாசமிக்க சேவகர் அனைவரும் பிறப்பின்போது சிவனால் விதிக்கப்பட்ட முடிவை எய்துகிறார்கள்.

 

பொன்னிவள காவியம் தொடர்பான விவரங்களுக்கும், வரலாற்றுக்கும், ஆராய்ச்சிக்கும், கதைமாந்தர்களுக்கும், வெளியீடுகளுக்கும், உயிர் இயக்கத்துக்கும், விளையாட்டுகளுக்கும், பதிப்புகளுக்கும் தொடர்பு கொள்க:

வரலாறு/மானுடவியல்/நாட்டுப்புறவியல்/சமயம்/இந்துமதம்/இந்தியப் புராணம்/தமிழ் கல்வி/இடைக்காலவியல்/தமிழ் மொழி.

The Legend of Ponnivala

What will you find Inside these two volumes?  What Is The Story?

 

In Part One the goddess Parvati creates nine farmer-brothers to cultivate the land. During a severe drought, the brothers and their wives are forced to seek the aid of the Chola King, who grants them land in Ponnivala. The eldest accidentally kills a herd of sacred cows, and his family and land are cursed by Lord Shiva to suffer seven generations of barrenness. The old farmer and his wife are granted a magical baby as relief from this terrible curse, but they die when the boy is just five years old. Orphaned and homeless, he finds refuge as a servant in the home of a wealthy farming family. Only when this boy has grown does Lord Vishnu reveal to him that the young sister of his masters is his rightful bride, and that he is the kingdom of Ponnivala’s true heir. When the kingdom has been reclaimed, the new king and his wise wife undertake a decades-long journey to the Council Chamber of Lord Shiva. They plan to beg his pardon and lift the family curse. This wish is granted, but along the way a new threat to the family and kingdom is revealed. Several seeds of destruction have been planted that will threaten the very existence of the beautiful land of Ponnivala in the next generation.

 

In Part Two the king of Ponnivala and his courageous queen are blessed with the birth of three magical children: the twin heroes Ponnar and Shankar, plus a chaste and clairvoyant sister Tangal. But unbeknownst to them, a murderous plot by their rival clansmen causes Lord Vishnu to persuade his sister, the family goddess Celatta, to spirit the two boys into hiding. With no male heirs, the king and queen are sent into exile for a second time.  Five years later, Celatta reveals the two sons to the king and queen, and the family returns to their beloved lands. When the boys come of age and their parents pass away, they become the new hero-kings of Ponnivala. Seeking to right the wrongs of the past, and to glorify their heritage via heroic deeds, the brave boys seek out adventure, avenging their forebears and winning family independence from the Chola overlord.  But this rule is interrupted when the twins’ younger sister requests a special gift-a gift which raises the ire of the neighbouring hunters, and brings them into direct confrontation with the promised agent of their destruction: the giant boar Komban. Claiming victory over Komban, however, only serves to expand the war with the hunters, until the twin kings, their sister, and their loyal servant meet the fate ordained by Lord Shiva at their creation.

TOP